Header Ads

நாகசக்தி கலை மன்றத்தின் பட்டிப்பொங்கல் நிகழ்வு

முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் பட்டிப்பொங்கல் நிகழ்வு இன்று(21) சனிக்கிழமை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

கோமாதா பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாரம்பரிய விவசாயசெய்கைமுறை, மாடு வளர்ப்பு போன்ற கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற்றது. மேலும் உழவர் பாடல்களும் பாடப்பட்டது.


கலை மன்றத்தின் தலைவர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், கிராமசேவை உத்தியோகத்தர், பாடசாலை அதிபர், மற்றும் கிராம பெரியார்கள், பட்டிக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.