Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் வரலாற்று பார்வை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரில் இருந்து தெற்கே 15கிலோமீற்றர் தொலைவில் வயலும் வயல்சார்ந்த இடமுமாகிய மரதநிலப்பரப்பிலே தான்தோன்றீ லிங்கத்துக்கு பக்கத்தில் அமைந்துள்ள முதுபெரும் கிராமம் முனைக்காடு  ஆகும். இங்கு இரண்டு பாடசாலைகள் காணப்படுகின்றது. அவற்றுள் ஆதியாய் இருந்து இன்றுவரை பல கல்விமான்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஓர் பாடசாலை மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் ஆகும். மண்முனை தென்மேற்கு கல்விக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பாடசாலையாக இப்பாடசாலை விளங்குகின்றது.

இப்பாடசாலையை அமைப்பதற்கு முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு வெள்ளையப்போடி என்பவரே காணிகொடுத்து உதவியவராவார். இவரால் வழங்கப்பட்ட காணியில் அக்கிராமத்தைச் சேர்ந்த முருகப்பன் உடையார் என்பவர் களிமண் சுவர் தென்னோலைக்கூரை மண்தரை ஆகியவற்றுடன் ஒரு கட்டிடத்தை கட்டி 1923ம் ஆண்டு தை மாதம் 1ம் திகதி பாடசாலையை ஆரம்பித்து நடத்தினார். அக்காலகட்டத்தில் பாடசாலையை தொடர்ந்து நடத்துவதற்கு மெதடிஸ்த மி~னறிமாரே பல வழிகளிலும் உதவி வழங்கினர். ஆதலினால் இப்பாடசாலைக்கு மெதடிஸ்த மி~ன் தமிழ் கலவன் பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.

மெதடிஸ்த மி~ன் தமிழ் கலவன் பாடசாலையின் முதலாவது அதிபர் இப்பாடசாலையை கட்ட உதவியவரும் முனைக்காட்டை பிறப்பிடமாக கொண்டவருமான வெ.குமாரசாமி ஆவார். மாணவர்கள் 12பேர் மட்டுமே அக்காலத்தில் இப்பாடசாலையில் கல்வி கற்றனர். இவரை அடுத்தாற்போல் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சி.ஞானமுத்து அதிபராக கடமையேற்றார். இவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை முனைக்காட்டைச் சேர்ந்த தங்கம்மா சோமசுந்தரம் ஆகியோர் ஆசிரியர்களாக கடமை புரிந்தனர். ஆரம்பத்தில் இது ஓர் ஆரம்ப பாடசாலையாகவே இயங்கியது. காலப்போக்கில் அண்ணாமலை எனும் சட்டம்பி வாத்தியாரும் கற்பித்தலில் இணைந்து கொண்டார்.

ஞானமுத்து அதிபரின் காலத்தில் இவ் வகுப்புக்கள் அதிகரிக்கப்பட்டு 8ம் வகுப்புடன்  இப்பாடசாலை இயங்கியது. இவர் தொடர்ந்து 20வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றார் இவருக்கும் பின்னர் மூன்றாவது அதிபராக முனைக்காட்டைச் சேர்ந்த தம்பிப்போடி அருளம்பலம் கடமை புரிகின்றார். இவருடைய காலத்தில் பாடசாலைக்கென ஒரு வயல் நிலம் காடு வெட்டி பெறப்பட்டது அதில் பயிர்ச்செய்கை மேற்கொள்;ளப்பட்டதாக சமூகப்பெரியார் கூறுகின்றனர்.

அருளம்பலம் அதிபர் இடமாற்றம் பெற்ற பின்னர் நான்காவது அதிபராக முதலைக்குடாவைச் சேர்ந்த கோபாலபிள்ளை நியமிக்கப்பட்டார். 8ம் வகுப்பு வரை இருந்த இப்பாடசாலையில் அவருடைய காலத்தில் வகுப்புக்கள் ஐந்தாக

இவரின் இடமாற்றத்தை அடுத்து நாவற்குடாவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சில வருடங்கள் அதிபராக கடமையாற்றிச் சென்றார். ஆரையம்பதியைச் சேர்ந்த ப+பாலபிள்ளை என்பவரின் சேவைக்காலத்தின் பின்னர் வாகரையைப் பிறப்பிடமாக கொண்ட கபிரியேல் சில வருடங்கள் அதிபராக கடமையாற்றினார். அவர் சென்றதும் பாடசாலைப் பொறுப்பினை வா.சிவப்பிரகாசம் பொறுப்பேற்று சிறிது காலம் நடத்தினார் அவரைத்தொடர்ந்து முனைக்காட்டைச் சேர்ந்த க.கனநாயகம்; 9வது அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின் ஆரையம்பதியைச் சேர்ந்த த.நல்லலிங்கம் அதிபராக நியமிக்கப்பட்ட போது ஆரம்ப பாடசாலையாக இருந்த இப்பாடசாலை பின்னர் 500க்கு மேற்பட்ட மாணவர்களையும் 12ஆசிரியர்களையும் கொண்ட பாடசாலையாக இயங்கத் தொடங்கியது.

அதன் பின்னர் முனைக்காட்டைச் சேர்ந்த த.விஜயரெத்தினம் அதிபராக பணியேற்றார். இவருடைய காலத்திலேதான் சமூகத்தின் அயராது முயற்சியினாலும் க.பொ.த(சா.த) வகுப்பு வரை நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றது. விஜயரெத்தினம் இடமாற்றம் பெற்றுச் செல்ல பிரதி அதிபராக இருந்த மா.சத்தியநாயம் நிருவாகப்பொறுப்பையேற்று நடத்தினார். பின் யோ.ஞானப்பிரகாசகம் அதிபராக கடமையைப் பொறுப்பேற்றார். பின்பு 2008ம் ஆண்டு மகிழடித்தீவைச் சேர்ந்த பொ.நேசதுரை அவர்கள் அதிபராக கடமையைப் பொறுப்பேற்றார் இவரது காலத்தில் சமூகத்தின் பங்களிப்புடன் க.பொ.த(உ.த) வகுப்பு வரை பாடசாலை தரம் உயர்த்தப்பட்டதுடன் கல்வியிலும் அதிகம் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று சென்றதன் பிற்பாடு 2014ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை மகிழடித்தீவைச் சேர்ந்த மூ.சிவகுமாரன் பாடசாலையை கடமையேற்று நடாத்தி வருகின்றார்.

பிரதேசத்தில் அதிகூடிய மாணவர்களை கொண்ட பாடசாலையாக விளங்கும் இப்பாடசாலை பல வளப்பற்றாக்குறையுடனும் தற்காலத்தில் செயற்பட்டு வருகின்றமை மனவேதனையே.
குறைக்கப்பட்டன. அத்துடன் வயற் காணியும் சிறு வயது மாணவர்களால் பராமரிக்கமுடியாது என்ற ஒரே காரணத்தினால் அயல்கிராமப் பாடசாலைக்கு பராமரிப்பதற்காக வழங்கப்பட்டது.