முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இனநல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் பொங்கல் விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் மாணவர்களிடையே இனநல்லுறவினை ஏற்படுத்தும் பொருட்டு பொங்கல் விழா இன்று(17) செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்டது.
குறித்த பொங்கல் விழாவிற்கு ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலய முஸ்லிம் சகோதர மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் பங்குபற்றலுடன் பொங்கல் விழா இடம்பெற்றது.
மண்பானையில் பொங்கல் பொங்கப்பட்டு பால் பொங்கிவர பட்டாசுகள் கொழுத்தப்பட்டன. இந்துசமய முறைப்படி பூசை ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் இஸ்லாமிய சமய அனுஸ்டானங்களும் இடம்பெற்றன.
வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், சாரதா வித்தியாலய அதிபர் க.கிருபைராசா, விடுதிக்கல் பாடசாலை அதிபர் மா.சத்தியநாயகம், அல்ஹம்றா வித்தியாலய ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Post a Comment