பாலர் பாடசாலை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு வடக்கு பாலர் பாடசாலையில் 2017ம் ஆண்டு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாலர் பாடசாலையில் கற்கும் சிரேஸ்ட மாணவர்களினால், மாலை அணிவிக்கப்பட்டு புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
இதன்போது, புதிதாக பாடசாலையில் இணைந்த மாணவர்கள், தாம் எதிர்காலத்தில் வகிக்கவுள்ள பதவிக்கேற்ற வகையிலான உடையணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment