Header Ads

இந்து சமயம்

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றென கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1] [2]. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.

சொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறு

இந்து என்ற சொல் சிந்து என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பாரசீக மொழி மூலமாக உருவான சொல்லாகும். இந்து என்ற சொல், முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியற் சொல்லாக, சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வசிக்கும் அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3] அப்படி பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்து என்ற சொல் ஒரு மதத்தைக் குறிக்காமல் ஒரு இடத்தைக் குறிப்பதாகவே இருந்தது.[குறிப்பு 1] சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள், 1946ல் தான் இயற்றிய இந்தியாவின் கண்டுபிடிப்பு(The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார்.[4][குறிப்பு 2] ஐரோப்பிய மொழிகளில் இந்து என்ற சொல், பாரசீக மொழி மூலமாக அரேபிய மொழியில் உருவான சொல் வழக்கான அல்-ஹிந்த் என்பதிலிருந்து உருவானது.[5] 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்திய துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் எனும் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது.[6] பின்னர், இந்து(Hinduka) என்ற சொல் சிற்சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. உதாரணமாக, பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள்(Rajataranginis of Kashmir (Hinduka, c. 1450)), 16ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுக்குள் இயற்றப்பட்ட சிற்சில வங்காள கௌடிய வைணவ நூல்கள்(Gaudiya Vaishnava texts including Chaitanya Charitamrita and Chaitanya Bhagavata). இவ்விடங்களில், இந்து என்ற சொல், இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும்(Mleccha) வேறுபடுத்திக் காட்டவே பயன்படுத்தப்பட்டது.[7] 18ஆம் நூற்றாண்டு இறுதியில், ஐரோபிய வணிகர்களும் ஐரோபிய காலனியர்களும், சிந்து நதிக்கப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்துஸ்(Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழியில் இந்து சமயம்(Hinduism) என்ற சொல், இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாசார மரபுகளை சேர்த்துக் குறிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், இந்து என்ற சொல் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், மற்றும் கிருத்துவர்கள் தவிர பிறரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3] தற்காலத்தில், சமயம் மற்றும் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் இந்து என்ற சொல் இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாசார மரபுகளை சேர்த்துக் குறிப்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது.

வரலாறு

இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றை கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரே தற்போதைய ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களை வரலாற்று ஆசிரியர்கள் ஆரிய இனத்தவர் என்று அழைக்கின்றனர்.
பல்வேறு முனிவர்களாலும், முன்னோர்களாலும் செவிவழியாக கடத்தப்பட்ட வேதம் எனும் வாழ்வியல் முறையை விளக்கமானது, நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது. இந்த வேதங்களில் உள்ள ரிசா, குபா, கரமு போன்ற ஆறுகள் ஆப்கான் தேசத்தினை சேர்ந்தவை என்பதால், சிந்து நதி நாகரீகம் அதுவரை பரவியிருந்ததாக கூறப்பெறுகிறது. இவ்வாறான வேதத்தினை முன்நிறுத்துகின்ற மதம் வேதமதமெனவும் அழைக்கப்பெறுகிறது.
வேதத்தின் உட்பொருளை கொண்டு எளிமையாக மக்களுக்கு கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாக கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காக புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
ஆரியர்களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாள 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது.

ஒரு சுருக்கமான மேலோட்டம்


இந்து சமய
கருத்துருக்கள்
லீலை
மாயை
கர்மா
ஆத்மா
பிரம்மம்
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
நிர்வாணம்
மோட்சம், வீடு
அவதாரக் கோட்பாடு
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தந்திரம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்

இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி யோகம், கர்ம யோகம் ஞான யோகம் மற்றும் யோகா, தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.

சனாதன தர்மம்

"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.

யோக தர்மம்

இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான தத்துவ நூல்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தத்துவங்கள்

வாழ்வின் நான்கு இலக்குகள்

இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.

இறைத்தொண்டு / சமூக சேவை

இறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.

பழமையான ரிக் வேதத்தின் ஒரு பகுதி

நூல்கள்

முதன்மைக் கட்டுரை: இந்து சமய நூல்களின் பட்டியல்

புள்ளிவிவரங்கள்


இந்து மதம் - நாட்டின் சதவீதம்
ஒவ்வொரு நாட்டின் இந்து மத மக்களின் சதவீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.[8] ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது.[9] சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.
இந்து சமய மக்கள் நிறைந்த நாடுகள் ( உலக நாடுகளில் இந்து சமயம் (இதுகாறும் 2008): லிருந்து )
  1. {{{பெயர் விகுதியுடன்}}} கொடி நேபாளம் 86.5%[10]
  2. இந்தியாவின் கொடி இந்தியா 80.5%
  3. மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ் 54%[11]
  4. {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கயானா 28%[12]
  5. பிஜியின் கொடி பிஜி 27.9%[13]
  6. பூட்டானின் கொடி பூட்டான் 25%[14]
  7. {{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரினிடாட் மற்றும் டொபாகோ 22.5%
  8. சுரிநாம் கொடி சுரிநாம் 20%[15]
  9. {{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை 15%[16]
  10. வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் 9.6%[17]
  11. கட்டார் கொடி கத்தார் 7.2%
  12. {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ரீயூனியன் 6.7%
  13. மலேசியா கொடி மலேசியா 6.3%[18]
  14. பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 6.25%
  15. குவைத்தின் கொடி குவைத் 6%
  16. Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் 5%
  17. சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 4%
  18. ஓமான் கொடி ஓமான் 3%
  19. பெலீசுவின் கொடி பெலீசு 2.3%
  20. Flag of the Seychelles சிஷெல்ஸ் 2.1%[19]
மக்கள் தொகையில் இந்து மதம் கிறித்துவம் மற்றும் இஸ்லாமியத்துக்குப் பின்னர், உலகின் மூன்றாவது பெரிய மதம் இருக்கிறது.

திருவிழாக்கள்


தீபாவளி திருவிழா

படங்கள்

சமூகம்

இந்து மத பிரிவுகள்

இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.
  1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  2. வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்
  3. சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  5. கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

வர்ணம்

வேதாந்த காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.

ஆசிரமம் (நான்கு நிலைகள்)

இந்து மதம் வழமையான வாழ்க்கையை நான்காக பிரிக்கின்றது. இவை ஆசிரமம் என்று அழைகப்பெறுகின்றன. அவையாவன,.
  1. பிரம்மச்சர்யம்
  2. கிரகஸ்தம்
  3. வனப் பிரஸ்தம்
  4. சந்நியாசம்

அகிம்சை

தாவரங்கள் மற்றும் மனிதர் அல்லாத உயிரினத்திடமும் அன்பு பாராட்டுவதும், உயிர்களுக்கு துன்பம் தராமல் இருப்பதுவும் அகிம்சைக் கொள்கையாகும். இந்து சமய நெறிகளை விளக்கும் உபநிடதங்களிலும், இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த அகிம்சைப் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சைவ உணவு பழக்கம்

அகிம்சைக் கொள்கைப்படி உயிர்களை வதைத்தலை தவிர்க்கும் பொருட்டு சைவ உணவு பழக்கத்தினை பல இந்துகள் கடைபிடிக்கின்றனர்.

மதமாற்றம்

இறை நம்பிக்கையில்லாதவர்களும், மற்ற மத நம்பிக்கை கொண்டவர்களும் இந்து மதத்திற்கு மாறியதன் பட்டியல் கீழே,.

கருத்துகள் இல்லை