2மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் 2மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வீடொன்று இன்று(19) கையளிக்கப்பட்டது.
அமரர் தர்மலிங்கம் மயில்வாகனம் அப்புக்காத்தர் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருடைய ஞாபகார்த்தமாக அவரது புத்திரர்களினால் அமைக்கப்பட்ட வீடொன்றே கையளிக்கப்பட்டது.
குடிசை வீடொன்றில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பமொன்றிற்கே இவ் அடிப்படை உதவி செய்யப்பட்டது.
இவ்வீட்டின் சாவியை வைபவரீதியாக அமரர் மயில்வாகனத்தின் புத்திரர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்பத்தாரிடம் வழங்கி வைத்தனர்.
Post a Comment