செய்தி துளிகள்
19.11.2012ம் திகதி முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஷ்வரர் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் சூரன்போர் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வை அனைத்து மக்களும் இறைபக்க்தியுடன் கண்டு முருகப்பெருமானின் அருளினைப்பெற்றனர்.
க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயம்: பரீட்சை திணைக்களம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப்
பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தனது
ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய
அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஏதாவது ஒன்றை பரீட்சை
நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென இலங்கை பரீட்சை திணைக்களம்
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இம்மõதம் 31 ஆம் திகதிக்கு 16 வயதை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரிகள் மாத்திரம் தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தபால் அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியும்.
அதேவேளை தபால் அடையாள அட்டையின் இரண்டாம், மூன்றாம் பக்கங்களின் இரண்டு நிழல் பிரதிகளை பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment