Header Ads

உணவு மற்றும் உடை

உணவு மற்றும் உடை


உணவு

தமிழர்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் பெரும் நாகரீகம் கண்டிருப்பிணும், தமிழ்நாட்டிற்கே உரிய சிறப்புமிக்க உலக புகழ்பெற்ற உணவுகளாக காலை உணவாக, இட்லி, தோசை, பொங்கல், வடை, ஆகியவையும், மதிய உணவாக, அரிசி சாதம், சாம்பார், பொரியல், அவியல், வறுவல், பச்சடி, ஊறுகாய், அப்பளம், வடகம் என்றும், இனிப்பு வகைகளாக, அதிரசம், முருக் கு, தேன்குழல், லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, ரவாகேசரி, அல்வா, போன்றவைகளை பாரம்பரியமாக உண்டு மகிழ்கின்றனர். இதுதவிர அந்தந்த பண்டிகைக்கேற்ப உணவுகள் தயாரித்தலும், சித்திரா அண்ணம் என்று சொல்லகூடிய தயிர்சாதம் எலுமிச்சை சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், எள்ளு சாதம் என்று பலவகை சாதங்கள் செய்து ஆண்டவனுக்கு படைத்து உண்டு மகிழ்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகையின் போது அதிரசம் சிறப்பாக செய்து மகிழ்வது. பொங்கலன்று இனிப்பு பொங்கல், பால் பொங்கல், வெல்லப்பொங்கல் என்றும், நவராத்திரி நாட்களில், தினமும் பலவகை சுண்டல்கள் செய்து மகிழ்வதும், கிருஷ்னன் பிறந்த நாளான கிருஷ்ணஜெயந்தி அன்று முருக்கு, சீடை, உருண்டைக ள் போன்றவை கிருஷ்ணருக்கு பிடித்தமான இனிப்பு பலகாரங்களை செய்து தின்று மகிழ்வதும், தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கடைடிபிடித்து வரும் உணவுப் பழக்கங்கள்.


உடை

உடை விஷயத்ததைப் பொருத்த வரை தமிழ்நாடு பாரம்பரியம் மிக்க பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். பெண்கள் சேலை அணிவதும், ஆண்கள் வேஷ்டி உடுத்துவதும் உண்டு. பிராமண உடையான "பஞ்சகச்சம்" என்று சொல்லக்கூடிய உடைகள் அணிவதும், வயதுப் பெண்கள் தாவணி அணிவதும், வயது ஆண்கள் உட்பட அனைவரும் பூணுல் அணிவதும் சிறப்பாக கருதக் கூடியவைகளாகும், நாகரீகம் முற்றிய போதிலும் பண்டிகை நாட்களில் பாரம்பரிய ஆடைகளை இன்னமும் தமிழர்கள் அணிவது தமிழர்களுக் கே உண்டான சிறப்பு.

 

கருத்துகள் இல்லை