பட்டிப்பளைப்பிரதேச
கலை, இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின்
பட்டிப்பளைக்கிளையினரும் இணைந்து 23.02.2013 ஆம் திகதி
பண்டாரியாவெளிக்கிராமத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.
கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட மேற்படி
கிராமத்தில் மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினரின்
அனுமதியுடன் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் 45 பேர் பங்கு
பற்றினர். இதன்போது டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள்
அடையாளங்காணப்பட்டதுடன் அவ்விடங்களில் குறித்த சூழலில் வசிக்கின்றவர்களின்
பங்குபற்றுதலும் பெறப்பட்டு துப்பரவு நடவடிக்கைகளும்
செய்யப்பட்டன.தகரப்பேணிகள்,பிளாஸ்ரிக் போத்தல்கள்,டயர்கள்,சிரட்டைகள் போன்ற
பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அவை அகற்றப்பட்டதுடன் இந்நடவடிக்கையின்
போது டெங்கு நுளம்பை அழிப்போம் என்னும் துண்டுப்பிரசுரமும் வீடுவீடாக
விநியோகிக்கப்பட்டதது.இந்நிகழ்வில் பட்டிப்பளைப்பிரதேச செயலகம் சார்பாக
பண்டாரியாவெளிக்கிராம சேவைப்பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர்
திரு.சி.ஜீவிதன் அவர்களும் சமூர்த்தி உத்தியோகத்தர் திரு. உமாபதிசிவம்
அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment