Header Ads

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரிட்சையில் முனைக்காடு மாணவன் 4ஆம் இடம்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரிட்சையில் முனைக்காடு மாணவன் 4ஆம் இடம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மாணவன் சி.லுக்சன் 4ஆம் இடம்.



5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரிட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த  முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மாணவன் சிவானந்தம் லுக்சன் 190 புள்ளிககளைப் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் 4ஆம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

 இப் பாடசாலையில் மேலும் நான்கு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.அதாவது தவசீலன் கவிப்பிரியா 166 புள்ளிகளையும் குமரகுரு டனுஸ்கா 166 புள்ளிகளையும் பரமேஸ்வரன் நிதர்சன் 162 புள்ளிகளையும் விஜயராசா லிதர்சன் 156 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.


இம் மாணவனுடன் தாய் திருமதி அசோதா சிவானந்தம், ஆசிரியர் பே.குமாரலிங்கம் அதிபர் பொ.நேசதுரை ஆகியோர் நிற்பதனைப் படங்களில் காணலாம் அதே வேளை முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்தில் சித்திபெற்ற 5மாணவர்களையும் படங்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை