Header Ads

கட்டிடத்திறப்பு விழா

சேவா பியச திட்டத்தின் கீழ் முனைக்காடு வடக்கு கிராமசேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட கட்டிடத்திறப்பு விழா முனைக்காடு வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 2014.02.06ம் திகதி பி.ப.03.00மணிக்கு இடம் பெற்றது இந் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு அவர் கருத்து தெரிவிக்கையில் இக்கட்டிட வேலைத் திட்டத்தை மிக வேகமாக செய்து முடித்ததன் பிரதிபலனாக எமது பிரதேசத்திற்கு இன்னும் ஒரு கட்டிடம் கிடைத்துள்ளது ஆகவே இதைப் போல நாம் அனைத்து செயற்பாடுகளையும் வேகமாக செய்து முடிப்பதன் மூலம் இன்னும் பல நன்மைகளை பெற வாய்ப்புள்ளது எனக் கூறினார். இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அமைப்புக்கள், கிராம மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.








கருத்துகள் இல்லை