Header Ads

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட கிராமங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடாத்தப்பட்டு வந்த நடமாடும் சேவையின் அடிப்படையில் முனைக்காடு தெற்கு,கிழக்கு,மேற்கு,வடக்கு ஆகிய நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான நடமாடும் சேவையானது 28.06.2014 சனிக்கிழமை காலை 09 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலமையில் நடைபெற்றது. இதில் பிரதேச செயலக கணக்காளர் திரு.சி.புவனேஸ்வரன் சமூக சேவை உத்தியோகத்தர் திரு.கமல்ராஜ், ஆகியோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது சமூர்த்தி அதிகார சபை, சமூக தினைக்களம், திட்டமிடல் பிரிவு, காணி பிரிவு, ஆட்பதிவு திணைக்களம், மோட்டர் போக்குவரத்து பிரிவு, சுகாதார திணைக்களம், கால்நடை வைத்தியர் பிரிவு, விவசாய திணைக்களம், மக்கள் வங்கி போன்றவற்றினூடாக பல சேவைகள் வழங்கப்பட்டன.  









கருத்துகள் இல்லை