Header Ads

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் உறவுகளின் ஞாபகர்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் உறவுகளின் ஞாபகர்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நேற்றும்(28) இன்றும்(29) முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


18க்கு மேற்பட்ட கழகங்கள் பங்கேற்ற இப்போட்டியில் இறுதிச்சுற்றுப் போட்டிக்கு பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகமும், பனையறுப்பான் கஜமுகா அணியினரும் தெரிவு செய்யப்பட்டு பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகம் முதலிடத்தை பெற்றது.

விளையாட்டுக்கழக தலைவர் திரு.ம.தனராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் இறுதி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் பூ.பிரசாந்தன், வித்தியாலய அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் அதனை சிறப்பிக்கும் முகமாக இன்று இரவு இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.










கருத்துகள் இல்லை