
இயற்கை எழில் கொஞ்சும் வளமிகு திருநாட்டில் வாவி மகள்
வளைந்து நிற்க உள்நின்று மீனினங்கள் இசைபாடும் மட்டுநகரின் தென்மேற்கில்
தாந்தோன்றுமீசன் அவன் தேரோடி வந்து நின்று திருவேட்டையாடும் வரலாற்று
சிறப்புமிக்க பழம்பதி
முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலய வருடாந்த
சடங்கு உற்சவம் எதிர்வரும் 21.07.2014 திங்கட்கிழமை திருக்கும்பம்
வைத்தலுடன் ஆரம்பமாகி 25.07.2014 வெள்ளிக்கிழமை பள்ளயம் கொடுத்தலும்,
26.07.2014 சனிக்கிழமை காலை 10.00
மணிக்கு சர்க்கரை அமுதுடன் இனிதே நிறைவு
பெற உள்ளது.
இவ் உற்சவ காலங்களில் கதாப்பிரசங்கங்கள்,
கலைநிகழ்வுகள் நாட்டுக்கூத்துக்கள் என்பன நடைபெறவுள்ளது. எனவே அனைத்து
அடியார்களும் ஆலயத்திற்கு வருகைதந்து எம்பெருமானின் இஸ்டசித்திகளை
பெற்றுய்யுமாறு இறையன்புடன் அழைக்கின்றோம்.
- ஆலயபரிபாலன சபை -
Post a Comment