மாவட்ட கூத்துப் போட்டி 2014
பாரம்பரிய முறைக்கமைய வட்டக்களரி அமைக்கப்பட்டு வடமோடி நாட்டுக்கூத்து
முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலிலும், தென்மோடி நாட்டுக்கூத்து முனைக்காடு மாரியம்மன் ஆலய முன்றலிலும் இன்றிரவு(09) இடம்பெற்றன. நாளைய தினம் நடைபெற இருக்கின்ற மாகாண மட்ட கூத்து போட்டிக்கான தெரிவாக இடம்பெற்ற இப்போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு. ஆர்.ரங்கநாதன் அவர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டியில் வடமோடி சார்பாக உலகநாச்சி வரலாறு அடங்கிய கூத்தினை கோவில்குள கலைஞர்களும், ஆடகசவுந்தரி எனும் தலைப்பில் கரவெட்டி கலைஞர்களும், பவளக்கொடி எனும் தலைப்பில் முனைக்காடு நாகசக்தி கலைஞர்களும் கூத்தினை ஆடினர். இதில் முனைக்காடு நாகசக்தி கலைஞர்கள் முதலாம் இடம் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகினர். அத்துடன் தென்மோடி நாட்டுக்கூத்தில் மண்டபத்தடி கலைஞர்கள் முதலாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகினர்.
Post a Comment