Header Ads

காஞ்சிரங்குடா ஆற்றிக்கு இறங்குதுறை அமைப்பதற்காக அறுபது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் காஞ்சிரங்குடா ஆற்றிக்கு இறங்குதுறை அமைப்பதற்காக அறுபது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஒருகிராமத்திற்கு ஒரு
வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்று(06) சனிக்கிழமை மண்முனை தென்மேற்கு
பிரதேச செயலகப்பிரிவில் பல இடங்களில் இடம்பெற்றது. இதில் முனைக்காடு மேற்கு கொங்கிறீட் வீதி அமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் போது கௌரவ மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில் எமது படுவான்கரை மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு  திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் குறிப்பாக குடி நீர் வசதி ஏற்படுத்தல், வீதிகள் அமைத்தல், வீட்டுத்திட்டங்கள் பெற்றுக்கொடுத்தல், குளங்கள் புனரமைத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சிந்தித்திருப்பதுடன் விரைவில் அவற்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்த அவர்  எமது மக்கள் கல்வியில் முன்னேற்ற வேண்டிய தேவை உள்ளதனால் கல்விக்கு கூடுதலாக அனைவரும் அக்கரை காட்டி கல்வியின் மூலம் அனைத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பட்டிப்பளை கிராமத்தில் மைதான அமைப்பு, அரசடித்தீவில் மைதான அமைப்பு, முதலைக்குடாவில் மைதான அமைப்பு, முனைக்காடு மேற்கில் கொங்கிறீட் வீதி அமைப்பு, முனைக்காடு கிழக்கில் கொங்கிறீட் வீதி அமைப்பு, முனைக்காடு வடக்கில் பல்தேவைக்கட்டிடம் போன்ற வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீள் குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர், அமைச்சின் பட்டிப்பளைப்பிரதேச இணைப்பாளர் திரு.த.பேரின்பராசா, ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


 













கருத்துகள் இல்லை