புலமைப்பரிசில் பரீட்சையில் முனைக்காடு சாரதா வித்தியாலயம் பெரும் சாதனை
இவ்வருடம் (2014) தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான வகுப்புக்களையும் தற்போது அதிபர் உட்பட 8 ஆசிரியர்களையும் கொண்டு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கட்டிட வசதியுமின்றி காணப்பட்ட
இப்பாடசாலை இவ்வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 27 மாணவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் தோற்றியிருந்தனர்.
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட வெட்டுப்புள்ளியாகிய 158க்கு மேல் 05 மாணவர்கள் புள்ளிகளைப் பெற்று சித்திபெற்றுள்ளதுடன் ஏனைய 22 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று பெரும் சாதனையை பெற்றுக்கொடுத்தனர். இம்மாணவர்களுக்கும் இவர்களை கற்பித்த அதிபர் ஆசிரியர்கள், மற்றும் பல வழிகளிலும் உதவி நல்கிய வலயக்கல்வி அலுவலகத்தினர், கோட்டக்கல்வி அலுவலகத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராம அமைப்புக்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், அனைவருக்கும் மனமுவந்து நன்றிகளை கூறிக்கொள்வதுடன், சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர் கிராம அமைப்புக்களும் பொதுமக்களும்.
Post a Comment