Header Ads

தீபாவளி சிறப்பு உறவுகளுடன் கைகோர்ப்போம் நிகழ்வு

பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தீபாவளி சிறப்பு உறவுகளுடன் கைகோர்ப்போம் நிகழ்வு இன்று(22) புதன்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தலைவர் திரு.த.மேகராசா அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது மாதா, பிதா,குரு, தெய்வம் போன்ற தலைப்பிலான சிறப்பு கவியரங்கும், வசந்தன் நிகழ்வும், கணனி கற்கை நெறியை ப+ர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன், அதிபர் திரு.க.தியாகராசா, அதிபர் சி.அகிலேஸ்வரன், கலாப+சணம் பொன்னம்பலம், மத்தளவித்தகன் கதிராமநாதன், நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி, ஆலயத்தலைவர் திரு.க.தியாகராசா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



















கருத்துகள் இல்லை