Header Ads

முனைக்காடு கிராம மக்களினால் மேற்கொள்ளப்பட்ட இறுதிநாள் திருவிழா

 கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்று விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் திருவிழா நேற்று இரவு (20) புதன்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

முனைக்காடு கிராம மக்களினால் மேற்கொள்ளப்பட்ட இறுதிநாள் திருவிழாவில் விநாயகப்பெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிசேக அலங்கார பூசைகள், வசந்த மண்டபத்தில் விசேட பூசைஆராதனைகள் நடைபெற்று விநாயகர், முருகன், சிவன் மூன்று தெய்வங்களும் அவர்களது வாகனங்களில் அமர்த்தப்பட்டு அடியார்களினால் தோள்களில் ஏந்தி வெளிவீதி வலம் வந்த காட்சியும் நடைபெற்றது.


அடியார் ஒருவரினால் நீண்டகாலமாக நேர்த்தியாக நிறைவேற்றப்படும் தீப்பாய்தல் நிகழ்வும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து ஆலயமே அடியார் கூட்டங்களால் நிரப்பி காணப்பட்டது.