Header Ads

இராமகிருஸ்ணா விளையாட்டு கழகத்தின் உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி ஆரம்ப நிகழ்வு.

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று(23) சனிக்கிழமை கழக மைதானத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில் உதைபந்தாட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறவிருக்கும் கழகங்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் ஊர்தியில் வைக்கப்பட்டு ஊர்வலமாக பிரதேசத்தின் பல இடங்களுக்கும் சென்று மைதானத்தினை வந்தடைந்ததை தொடர்ந்து கழக கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் iமைதான வடிவில் செய்யப்பட்ட கேக் வைபவரீயாக வெட்டப்பட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் தலைவர்களுக்கும் கழக தலைவர் பு.தனராசா அவர்களால் வழங்கப்பட்டதை தொடர்ந்து புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது.


உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நாளை(24) பி.ப.03மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து அன்றிரவு இசை நிகழ்ச்சியும் நடபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.