Header Ads

அன்னையின் ப+மிக்கும், அன்னமிட்ட ஊருக்கும், அறிவுகொடுத்த ஆலயத்திற்கும் உதவி கொடுக்க அழைக்கின்றோம்.



பழமை வாய்ந்த கிராமம் ஆகிய எமது முனைக்காட்டு கிராமத்தில் உள்ள மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் - 01தொடக்கம் தரம் -  13 வரையான வகுப்பு மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.



இப்பாடசாலையில் பல்வேறு தேவைப்பாடுகள் இருக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாய தேவையும் உள்ளது. பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகள் இன்று வளத்தில் வளர்ச்சி பெற்று மிளிர்கின்ற போது. எமது பாடசாலை இன்னும் வளர்ச்சியுறாமல் இருப்பது வேதனை தருகின்றது.

இதனை கருத்தில் கொண்டு இப்பாடசாலையின் பழையமாணவர்கள், கிராமத்தின் உறவுகள் அனைவரும் இணைந்து எமது பாடசாலையை கட்டியெழுப்புவோம்.

இதற்காக அனைவரும் கை கொடுங்கள். எமது பாடசாலையின் அதிபர் அல்லது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் உதவியை வழங்குங்கள்.

அன்னையின் ப+மிக்கும், அன்னமிட்ட ஊருக்கும், அறிவுகொடுத்த ஆலயத்திற்கும் உதவி கொடுக்க அழைக்கின்றோம்.

நம்மூரின் எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் சிறு உதவி




கருத்துகள் இல்லை