Header Ads

முனைக்காடு கிராமத்தில் சாதனையாளர் பாராட்டு

எழில் கொஞ்சும் அழகிய மட்டுநகரில் படுவான்கரையினிலே வீரமுடன் செல்வம் கல்வியென முத்தமிழும் முக்கனியும் செழித்திலங்கும் பண்டைய வரலாற்று கிராமமாகிய
முனைக்காடு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளாகிய நேற்று (01) மதிய பூசையினை தொடர்ந்து அம்மனின் தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 





இதன்போது இவ்வாண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையிலும், தரம் 5 புலமைப் பரீட்சையிலும் சித்தி பெற்ற மாணவர்களை சட்டத்தரணி திருமதி மங்களேஸ்வரி சங்கர் அவர்கள் ஆலய முன்றலில் வைத்து பாராட்டு பரிசில்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடலாம்.