Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாதிரி சித்திரைப் புத்தாண்டு

முனைக்காடு விவேகானந்த வித்தியாலய  பாடசாலையில் நடாத்தப்பட்ட அதிபர், ஆசிரியர்கள், உயர்தர வகுப்பு மாணவர்களால் மாதிரி சித்திரைப் புத்தாண்டு  சிறப்பாக  08.04.2016 ஒழுங்கமைக்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ர.கருணாநிதி அவர்கள் கலந்து சிப்பித்திருந்தார். 

வருடப்பிறப்பு தொடர்பாக நாம் பின்பற்ற வேண்டிய பண்பாட்டு விழுமியங்கள், உணவு முறைகள் தொடர்பாக அதிபர், மற்றும் திருமதி சா.பகீரதன் ஆசிரியை, ஆகியோர் விளக்கமளித்ததுடன் பஞ்சாங்கம் வாசித்து முறையான விளக்கத்தை திரு.அ.இராமேஸ்வரன் ஆசிரியர் வழங்கினார். 

உயர்தர பெண்கள் முறுக்கு, சோகி, பயற்றம் பலகாரம், சீனிப் பலகாரம் போன்ற தமிழ் பாரம்பரிய சிற்றுண்டிகள் தயாரித்து வழங்கினர். பலூன் ஊதி உடைத்தல், கயிறுழுத்தல் முதலிய போட்டிகளும் நடாத்தப்பட்டன. கைவிசேசம் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு ஆசியும் வங்கப்பட்டது.



அத்துடன் முதலாந் தவணைப் பரீட்சையில் முதல் முன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிக்கைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.