நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் ஊஞ்சல் விழா
பிறந்திருக்கும் துர்முகி வருட சித்திரைப்புத்தாண்டை சிறப்பித்து நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் ஊஞ்சல் விழா இன்று(14) வியாழக்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
தமிழர்களது பாராம்பரியங்களுள் ஒன்றான ஊஞ்சல் ஆடுதலானது ஒவ்வொரு வீடுகளிலும் அக்காலங்களில் இடம்பெறுவது வழக்கமாகவிருந்தபோதிலும் நவீன உலக மயமாக்கலினால் இயற்கையாக மரங்களில் ஊஞ்சல் இட்டு ஆடுவது வழக்கொழிந்துள்ள நிலையில் இதனை இளம் தலைமுறைக்கு வெளிக்கொணரும் வகையில் ஊஞ்சல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊஞ்சல் விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஆடியதுடன் ஊஞ்சல் பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.
Post a Comment