நாகலிங்கேஸ்வரர் ஆலய 2ம் நாள் கற்பூரத்திருவிழா
முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 2ம் நாள்(10.07.2016) பூசை நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.
இதனை சிறப்பித்து நாகசக்தி கலைமன்றத்தினால் நெறியாழ்கை செய்யப்பட்ட அபிமன்னன் சண்டை கூத்தும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
மேலும் கற்பூரத்திருவிழாவும், சுவாமி உள்வீதி, வெளிவீதி ஊர்வலமும்; இடம்பெற்றமையுடன் பல நூற்றுக்கணக்கான அடியார்களும் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் புதிதாக சோ.நிமல்ராஜ் அவர்களின் செலவில் நிர்மானிக்கப்பட்ட திருப்பணிச்சபையும், வெளிநாட்டில் தொழில் புரிந்து கொண்டிருக்கும் உறவுகளால் அமைக்கப்பட்ட முன்வாயில் கதவும் திறந்து வைக்கப்பட்டது.
ஆலயத்தின் முன் வாயிலில் அடியார்களின் மகரதோரணமும் கண்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment