Header Ads

கவிக்குயில் சிவஞானம் - முனையூரின் ஆளுமை

முனைக்காடு கிராமத்தினை வசிப்பிடமாக கொண்டு அமரத்துவமடைந்த கதிராமப்போடி சிவஞானம் அவர்களின் ஆளுமைபற்றி எடுத்துரைக்கின்றது முனைமண்.

சிறந்த குரல்வளம் கொண்டிருந்த க.சிவஞானம் கவிதை எழுதுவதில், சொல்வதில் மிகவும் சிறந்து விளங்கினார். எந்த தலைப்பை சொன்னாலும் உடனே கவிதையை மழையாய் கொண்டுகின்ற ஆளுமை மிக்கவராக செயற்பட்டார். இதனால் கவிக்குயில் சிவஞானம் என்றே எல்லோரும் அழைத்தனர். இப்பெயரைக் கூறினால்தான் இவரை,  யாவருக்கும் தெரியும். 
கவிதையோடு மட்டும் தனது திறமையை வைத்துக்கொள்ளாது, அறிவிப்பு செய்வதிலும் சிறந்து விளங்கினார். அறிவிப்பு செய்யும் போது வர்ணித்து செய்வதில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். 


வெளிப்படையாக எல்லோருடனும் பேசும் இவர், நகைச்சுவை செய்வதில் மிகமிக திறமையாகவும் செயற்பட்டார். 

சூறாவளி இடம்பெற்ற போது அதனை நினைவு கூர்ந்து, அதில் இடம்பெற்ற சம்பங்களை வைத்து அவற்றை கூத்தாக எழுதி, பாடி, அரங்கேற்றிய பெருமையும் இவரைச் சாரும்.

ஏற்பட்ட அசாதாரண சூழலில் உயிரிழந்த இவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், இன்றும் கவிக்குயில் சிவஞானம் அவரது கவிதை புலைமை பலரின் மனங்களிலே நின்று நீங்கவில்லை. அவை என்றும் நீங்கா சொத்தாகவே நிலைத்து நிற்கும்.