நாகசக்தி கலை மன்றத்தினால் இறுவெட்டு, பஜனை பாமாலை வெளியீடு
நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் அபிமன்னன் சண்டை கூத்து, கரகம், கும்பி, வசந்தன் இறுவெட்டு வெளியீடும், மன்றத்து உறுப்பினர் ம.கேதீஸ்வரனால் எழுதப்பட்ட பஜனை பாமாலை புத்தக வெளியீடும் நேற்று(27) செவ்வாய்க்கிழமை இரவு முனைக்காடு நாகசக்தி கலை அரங்கில் இடம்பெற்றது.
கூத்து இறுவெட்டின் முதற்பிரதியை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி குருக்களிடமிருந்து மூத்த கூத்து கலைஞர் வே.மாசிலாமணி பெற்றுக்கொண்டார். அதுபோன்று பஜனை பாமாலை புத்தகத்தின் முதற்பிரதியை இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் ஞா.பேரின்பம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வின் தொகுப்புரையை மு.நமசிவாயம், கூத்து அறிமுக உரையை இ.குகநாதன், புத்தகத்திற்கான நயவுரையை செ.முருகுப்பிள்ளை நிகழ்த்தியிருந்தனர்.
மன்றத்தின் தலைவர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்செல்வன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.ருபேசன் மற்றும் அரச அதிகாரிகள், கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment