Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலய சாரண மாணவர்கள், சுகாதாரக்கழகம், சென்ஜோன்ஸ் படையணி என்பன இணைந்து டெங்கினை இல்லாமல் ஒழிக்கும் நோக்கில்  டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமொன்றினை இன்று(06) வெள்ளிக்கிழமை நடாத்தினர். 


ஆட்கொல்லி டெங்கினை ஒழிப்போம், மக்களை காப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் முனைக்காடு கிராமத்தின் அனைத்து வீதிகளினூடாகவும் சென்று மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது. 

சூழலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வாழ்வோம், டெங்கு இல்லாச் சூழல் உயிர் வாழும் சூழல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும்  ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.