Header Ads

முனைக்காடு சாரதா வித்தியாலயத்திற்கு 7வருட நிறைவு


முனைக்காடு கிராமத்தில் 2010.01.04ம் திகதி சாரதா வித்தியாலயம் என்ற பெயருடன் தரம் - 1வகுப்பை மாத்திரம் கொண்டு முனைக்காடு வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் முனைக்காடு சாரதா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது.


ஆரம்பத்தில் பாடசாலைக்கு கட்டிடம் இல்லாததினால் பலநோக்கு கட்டிடத்திலும், அதைதொடர்ந்து ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வட்டக்கொட்டிலும், கிடுகுகளினால் அமைக்கப்பட்ட கொட்டில்களிலும் மாணவர்கள் சிரமத்தின் மத்தியில் கல்வியை தொடரும் நிலையிருந்தது. அவ்வாறான நிலைகள் இருந்தும் கல்வியில் சிறப்பான தேர்ச்சியை பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


சாரதா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 7வருடங்கள் இன்றோடு நிறைவு பெறுகின்றது. தரம் - 1வகுப்புடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தற்போது தரம் 5வரையான வகுப்புக்களை கொண்டு வளர்;ச்சி பெற்றுள்ளது.

பாடசாலை ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை க.கிருபைராசா அதிபராக இருந்து பாடசாலையை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றார்.

2014ம் ஆண்டு முதன்முதலில் தரம் - 5புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய இப்பாடசாலையை சேர்ந்த 27 மாணவர்களும்  100புள்ளிகளுக்கு மேல் பெற்றனர். அவர்களுள் 7பேர் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்திருந்தனர். அதேபோன்று 2015ம் ஆண்டு 02மாணவர்களும், 2016ம் ஆண்டு இரண்டுமாணவர்களும் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெற்றிருக்கின்றனர்.