கடல்கடந்த முனையின் கரங்கள் அமைப்பினால் உதவிகள் வழங்கி வைப்பு
பாலர்பாடசாலை மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வாழ்வாதரத்திற்கான நிதியுதவி போன்றன வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(17) வெள்ளிக்கிழமை முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
முனைக்காடு கிராமத்தில் உள்ள இரு பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்களும், தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், கணவனை இழந்த ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்வதற்கு நிதியுதவியும், மரணவீடொன்றின் மரணச்செலவுக்காக ஒரு தொகை பணமும் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடையில் பொறிப்பதற்கான பாடசாலை சின்னமும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
கடல்கடந்த முனையின் கரங்கள் அமைப்பினால் குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடல்கடந்த முனையின் கரங்கள் அமைப்பின் உறுப்பினர் ம.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன், சாரதா வித்தியாலய அதிபர் க.கிருபைராசா, விடுதிக்கல் பாடசாலையின் அதிபர் மா.சத்தியநாயகம், ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் அ.அருள்ராஜசிங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர்.
Post a Comment