எல்லே போட்டியில் முனைக்காடு இராமகிருஷ்ணா முதலிடம்
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற குழு விளையாட்டு எல்லே போட்டியில் முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகம் முதலிடத்தினையும் அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
முதல் சுற்றில் கடுக்காமுனை ஆதவன் விளையாட்டு கழகத்தினையும் இரண்டாம் சுற்றில் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டு கழகத்தினையும் எதிர்த்தாடி இறுதி சுற்றில் அம்பிளாந்துறை ஆதவன் விளையாட்டு கழகத்துடன் மோதி முதலிடத்தை பெற்றது.




Post a Comment