முனைக்காடு விவேகானந்த வித்தியாலத்தில் 27பேர் O/L சித்தி
முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திலிருந்து 2016ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 61மாணவர்கள் தோற்றி, இன்று வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 27மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதனது சித்திவீதம் 44.26% ஆகும்.
சென்ற ஆண்டினைவிட இவ்வாண்டு சித்திவீதம் அதிகரித்துள்ளதுடன், சென்ற ஆண்டு சிறந்த பெறுபேறாக 8ஏ, 1சீ தர சித்திகள் பெறப்பட்டிருந்தது. இவ்வாண்டு அவை வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment