Header Ads

O/L பரீட்சையில் முனைக்காடு பாடசாலை மாணவர்களுக்கும் சிறந்த பெறுபேறு

வெளியாகியுள்ள 2016ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்;ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலத்தில் அதிகூடிய பெறுபேறாக 6ஏதர சித்திகளும், ஒரு வீ தர சித்தியும், ஒரு சீ தர சித்தியும் பெறப்பட்டுள்ளது. இதனை சிவஞானசெல்வம் ஜதிக்கா என்ற மாணவி பெற்றுள்ளார்.


மேலும், இரண்டாவது பெறுபேறாக ரவி பிரவிகா 5ஏதர சித்திகளையும் 1வீதர சித்தியினையும் 3சீ தர சித்தியையும், மூன்றாவது பெறுபேறாக ஜெ.யதுசா 5ஏதர சித்திகளையும், ஒரு வீதர சித்தியினையும், 2சீதர சித்திகளையும் பெற்றுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களில் இன்னும் பலர் சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.