முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தின் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(18) மாலை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய கொடி, பாடசாலை கொடி, இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு, மாணவர்களினால் ஒலிம்பிக் தீபமும் ஒளிரச்செய்யப்பட்டது. மாணவர்கள் அணிநடை வகுப்பு, உடற்பயிற்சி கண்காட்சி, மாணவர்களின் ஊர்வலம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அஞ்சல் ஒட்டம், மிட்டாய் ஓட்டம், குறுந்தூர ஓட்டம் போன்ற போட்டிகளும் மற்றும், விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கோட்டக்கல்விப் பணிப்பாளர், உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர், கோட்டப்பாடசாலைகளின் அதிபர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment