முனைக்காடு கண்ணகி அம்மன் ஆலயத்தில் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு
முனைக்காடு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் 4ம் நாள் கல்யாணக்கால் வெட்டும் வைபவம் நேற்று(07) புதன்கிழமை இடம்பெற்றது.
வீடொன்றிலிருந்து கல்யாணக்கால் வெட்டப்பட்டி, பூசை செய்யப்பட்டு ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கல்யாணக்கால் நிறுத்தப்பட்டது.
4ம்நாள் இரவினை சிறப்பிக்கும் வகையில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து வழங்கிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Post a Comment