Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் செயற்பட்டு மகிழ்வோம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு இன்று(22) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் மைதான ஊர்வலம், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், மாணவர்களின் அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வுகள், பெற்றோருக்கான கயிறு இழுத்தல், பிரதேச மாணவர்களுக்கிடையிலான அஞ்சல் ஓட்டம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.


இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





























































கருத்துகள் இல்லை