அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா

முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்களினால் , பாடசாலையில் பொங்கல் விழா இன்று(4) கொண்டாடப்பட்டது.
பாடசாலையில், பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பஜனை பாடல்களையும் பாடினர்.
பொங்கல் விழாவில், மண்முனை தென்மேற்கு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மேகலா முகுந்தன் கலந்து கொண்டிருந்தார். பூசை ஆராதனைகளை முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர்; கண்ணகி அம்மன் ஆலய குரு சிவசூரியம் நிகழ்த்தினார்.
பொங்கல் விழாவில், வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.







Post a Comment