முனைக்காட்டில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்.
சித்திரைப்புத்தாண்டை சிறப்பித்து, முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று(15) ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு, முனைக்காடு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில், கண்கட்டி முட்டி உடைத்தல், பணிஸ் உண்ணுதல், பால்சோறு உண்ணுதல், பலூன் உடைத்தல், கிடுகு இழைத்தல், தேங்காய் துருவுதல், கயிறு இழுத்தல், தலையணைச்சமர், வழுக்குமரம் ஏறுதல், மீட்டாய் ஓட்டம், மரதன் ஓட்டம் போன்ற போட்டிகளும் நடைபெற்றன.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.






















Post a Comment