Header Ads

உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்டப்போட்டி

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் நடாத்திய உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.


முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில், சனி(16), ஞாயிறு(17) தினங்களில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 32கழகங்கள் கலந்து கொண்டிருந்தன. இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக அணியினரும், கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகமும் தெரிவாகி, போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில்,  குறித்த நேரத்திற்குள் எவ்வித கோள்களையும் இரு அணியினரும் உட்புகுத்தாத நிலையில், போட்டி சமநிலையில் நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து தண்டணை உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. தண்டணை உதையில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அணிகளுக்கு, வெற்றிக்கிண்ணங்களும், சிறந்த விளையாட்டு வீரர், பந்துகாப்பாளர் போன்றோருக்கு நினைக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.































கருத்துகள் இல்லை