முனைக்காடு பொதுமயானத்தில் சிரமதானப்பணி
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முனைக்காடு பொது மயானத்தில் இன்று(09) திங்கட்கிழமை சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
முனைக்காடு கிராமமக்களின் வேண்டுகோளிக்கிணங்க, மண்முனை தென்;மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான ம.குகநாதன், சி.லோகிதராசா ஆகியோர்களின் நேரடிக்கண்காணிப்பில் பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
குறித்த மயானப்பகுதி வீதியோரங்களில், இனந்தெரியாத நபர்களினால், இரவுவேளைகளில் கோழிக்கழிவுகள், தலைமுடிகள், வீட்டுக்கழிவுகள் வீசப்பட்டு வீதியால் செல்லமுடியாத வகையில் தூற்றம் வீசிவந்த நிலையிலே துப்பரபு செய்யப்பட்டது.
துப்பரவு செய்யப்பட்டுள்ள குறித்த மயான வீதியின் அருகில் குப்பைகள் வீசுபவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதேசசபை உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
Post a Comment