Header Ads

கடல்கடந்த முனையின் கரங்கள் அமைப்பால் உதவிகள் வழங்கி வைப்பு

முனைக்காடு, கடல்கடந்த முனையின் கரங்கள் அமைப்பினால் பல்வேறு உதவிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முனைக்காடு விவேகானந்த வித்தியாலய, சாரதா வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், தேசிய ரீதியில் சாதித்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.


அமைப்பின் 3வது அகவையினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வில், கல்விக்கான உதவி, பாலர்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையுடன், பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் பெயர்களில் பணம் வைப்புச்செய்யப்பட்டு வங்கிப்புத்தகங்களும், வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நபர்களை இனங்கண்டு அவர்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.





கருத்துகள் இல்லை