மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று தேசியமட்டத்திற்கு தெரிவான முனைக்காடு மண் வாரிசு
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட தனிவிளையாட்டுப் போட்டிகள் மூன்றில் முதலிடங்களைப் பெற்று சம்பியனாகி தேசிய போட்டிற்கு, முனைக்காடு நாகசக்தி இளைஞர் கழகத்தின் உறுப்பினர் வி.குபேனியா தெரிவாகியுள்ளார்.கல்லடி சிவானந்தா விளையாட்டரங்கில், இன்று(14) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5000மீற்றர், 1500மீற்றர், 800மீற்றர் ஆகிய போட்டிகளிலேயே முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.
தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ள குறித்த யுவதி, தேசியமட்டத்திலும் சாதனையினை நிலைநாட்டவும், எதிர்காலம் சிறக்கமும் முனைமண் இணையதள குடும்பம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.




Post a Comment