Header Ads

சொந்த மண்ணில் வெற்றியை தனதாக்கியது இராமகிருஸ்ணா

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் பொன்விழா நிகழ்வின் உதைபந்தாட்ட லீக் இறுதி போட்டியில் சொந்த மண்ணிலே இரு கோள்களை உட்புகுத்தி முதலிடத்தினை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.


முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று(12) மாலை சனிக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது.

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்திற்கும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியின், ஆரம்பத்தில் ஒரு கோள்களை அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் உட்புகுத்திய நிலையில், போட்டியின் இடைவேளைக்கு பின்பு இராமகிருஸ்ணா அணியினர் இருகோள்களை இட்டு இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

போட்டியின் இறுதி நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் றஞ்சிதமலர் கருணாநிதி, ஊடகவியலாளர் பா.இன்பராசா, அதிபர்களான மா.சத்தியநாயகம், க.ரவிசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

















கருத்துகள் இல்லை