Header Ads

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 07.09.2013ம் திகதி அன்று இந்து சமய பொதுப் போட்டிப்பரீட்சை இலங்கை முழுவதும் நடத்தப்பட்டது. இப்பரீட்சையில் சித்தியடைந்து தேசியமட்டம், மாவட்ட மட்டத்தில் முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் முதல் இடங்களை பெற்றுள்ளனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 07.09.2013ம் திகதி அன்று இந்து சமய பொதுப் போட்டிப்பரீட்சை இலங்கை முழுவதும் நடத்தப்பட்டது. இப்பரீட்சையில் சித்தியடைந்து தேசியமட்டம், மாவட்ட மட்டத்தில் முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் முதல் இடங்களை பெற்றுள்ளனர். அவ்வகையில் வகுப்பு 06ல் தோற்றி தேசியமட்டத்தில் முதலாம் இடத்தினை முனைக்காட்டை சேர்ந்த மகாலிங்கம் - சதுர்ஜா  அவர்கள் பெற்றுள்ளதுடன் மாவட்டமட்டத்தில் வகுப்பு 06ல் முதலிடத்தினை குமரகுரு - டர்சிகாவும் வகுப்பு 10ல் வில்வரெத்தினம் - கதீஷ் முதலிடத்திலும், வகுப்பு 10ல் விநாயகமூர்த்தி - ஜனனி 3ம் இடத்தினையும், வகுப்பு 11ல் ஞானசேகரம் - அகிலவேணி முதல் இடத்தினையும், வகுப்பு 11ல் சுதாகரன் - மாலினி 3ம் இடத்தினையும் பெற்றுள்ளத்துடன், சிறந்த அறநெறி பாடசாலையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 07.12.2013ம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்னமிசன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை