பட்டிப்பளைப் பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட குழு விளையாட்டுக்கள்

பட்டிப்பளைப் பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட குழு விளையாட்டுக்கள் கடந்த 22ம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.
அன்றைய தினம் கபடி மற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் இடம் பெற்றன இதில் ஆண்களுக்கான கபடி போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தையும், பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் அரசடிதீவு விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம் முதலிடத்தை பெற்றது.
ஏனைய போட்டிகள் எதிர்வரும் 05ம், 06ம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment