Header Ads

முனைக்காடு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பாலஸ்தான மஹா கும்பாவிசேகம்

முனைக்காடு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பாலஸ்தான மஹா கும்பாவிசேகம் நேற்று (26) காலை 9.30மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி மாலை 02.00மணிக்கு நிறைவு பெற்றது. தொடர்ந்து மாலை 05.00மணி தொடக்கம் 09.00 மணிவரை கிரியைகள் இடம் பெற்றது.

27.03.2014ம் திகதி இன்றைய தினம் காலை 06.30மணி முதல் மீண்டும் கிரியைகள் ஆரம்பமாகி 7.45 - 8.45 வரையான மேடலக்கின சுபவேளையில் கண்ணகி அம்மனுக்குரிய பாலஸ்தான மஹா கும்பாவிஷேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து எஜமான அபிஷேகம் ஆச்சாரியசம்பாவனை, மகேஸ்வர பூசை என்பன சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது.

இக் கிரியைகளை பிரதிஸ்டா குரு லஷ்மிகாந்தஜெகதீச குருக்கள் (தலைவர் சர்வமதங்களின் ஒன்றியம் சனாதனசர்வ பீடம்),  சாதகாசிரியர் பிரம்மஸ்ரீ சோ.விஷ்வவாரணசர்மா, ஜாகசம்ரஷ்கர் சிவஸ்ரீ நவராஜாசர்மா ஆலய குரு ப.மானாகப்போடி ஆகியோர் இக்கிரியையினை சிறப்பாக செய்தனர்.

இறுதியாக இன்றைய தினம் (27) அடியார்களுக்கான அன்னதான நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








கருத்துகள் இல்லை