Header Ads

மட்/ம.மே/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா

மட்/ம.மே/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா இன்று(07) முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் வித்தியாலய அதிபர் திரு.பொ.நேசதுரை அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது ஒலிம்பிக் தீபம் ஏற்றல், அணிநடை மரியாதை, உடற்பயிற்சியும் கண்காட்சியும் மற்றும் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி பழையமாணவர்களுக்கான நிகழ்ச்சி என்பன இடம் பெற்றது.




இப்போட்டியில் விபுலானந்தா இல்லம் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தினை விவேகானந்தா இல்லமும், மூன்றாம் இடத்தினை இராமகிருஸ்ணா இல்லமும் பெற்றது

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.க.சத்தியநாதன்(வலயக்கல்விப்பணிப்பாளர், மட்டக்களப்பு மேற்கு) அவர்களும், சிறப்பு  அதிதியாக கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர் திரு.இ.மோகனதாஷ் அவர்களும், கௌரவ அதிதிகளாக ம.தெ.மே,கோட்ட பாடசாலைகளின் அதிபர்களும், மட்டக்களப்பு மேற்கு வலய ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோரும், அழைப்பு அதிதிகளான கிராம உத்தியோகத்தர்கள், கிராம ஆலய பரிபாலன சபை தலைவர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை பெற்றார் அபிவிருத்தி சங்க, பழைய மணவர்சங்க பிரதிநிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.













Munaiman..

கருத்துகள் இல்லை