Header Ads

அடிக்கல் நாட்டு விழா

முனைக்காடு சாரதா வித்தியாலத்தில் 100அடி நீளமும் 25அடி அகலமும் உடைய புதிய கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (11) புதன்கிழமை வித்தியாலய அதிபர் திரு.கிருபைராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பொறியிலாளர் மற்றும் கிராம அமைப்புகளினது பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் - 05வரை வகுப்புக்கள் உள்ளதுடன் இதுவரை தற்காலிக கொட்டில்களிலிலே இம்மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















கருத்துகள் இல்லை