நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட கிரியைகள்
இன்று(13) வெள்ளிக்கிழமை மாலை 5மணி 39நிமிடத்தில் குருபகவான் தனது
உச்ச ராசியான கடக ராசிக்கு சஞ்சரிக்கின்றார் இதற்காக முனைக்காடு
நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட கிரியைகள் மற்றும் பூசைகள் காலை
9.30மணிக்கு சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் அவர்களின் தலைமையில் ஆலய குரு
சிவஸ்ரீ.வ.ஹரிகரசர்மா அவர்களும் இணைந்து நடாத்தினர்.இதன்போது தோச நட்சத்திரங்களை உடையவர்கள் அர்ச்சனை செய்து மஞ்சள்பட்டு, கடலைமாலை, கடலைபிரசாதம், பூ. தேங்காய் என்பவற்றை யாகத்தின் போது அக்கினியில் இட்டு தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.






Post a Comment