Header Ads

பௌர்ணமி கலைவிழா 2014

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாளில் பௌர்ணமி கலைவிழாவினை சிறப்பாக மட்டக்களப்பு நகரில் நடாத்திவருகின்றனர். அந்த வரிசையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் இம் மாதத்துக்கான பௌர்ணமி விழாவினை இன்று மிகச் சிறப்பாக கல்லடிப்பாலத்தின் அருகில் நடாத்தினர். பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரிய வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்த இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆர்.ரங்கநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.  இதன்போது முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினரால் பல பாரம்பரிய கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. இதனை  பிரதேச செயலாளர்களும்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பார்வையிட்டமை குறிப்பிடலாம்.







கருத்துகள் இல்லை